மேல் மாகாணத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 1189 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே நேற்று அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் நேற்று முன்தினம் (03) 1025 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்றைய தினம் (04) அந்த எண்ணிக்கை 1189 ஆக அதிகரித்துள்ளது.

