Our Feeds


Tuesday, June 15, 2021

www.shortnews.lk

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வரவேண்டிய கடன் 15,350 கோடிகள் - கடன் கட்ட வேண்டிய நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு

 



அரச நிறுவனங்கள் சில இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 15,350 கோடி ரூபாவை கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி டி.ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார்.


அவ்வாறு கடன் செலுத்த வேண்டியுள்ள நிறுவனங்களில் இலங்கை மின்சார சபையே முன்னிலையில் உள்ளதாகவும் மின்சார சபை 8,200 கோடியை கடனாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 5,700 கோடியை வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுயாதீன மின் உற்பத்தியாளர்கள் 1200 கோடியை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் மேற்படி மூன்று நிறுவனங்களில் மாத்திரம் 15,100 கோடி ரூபா அறவிடப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனை தவிர மேலும் அரச நிறுவனங்களிடமிருந்து 2005 கோடி ரூபாவை அறவிட வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் சாதாரணமாக அந்த நிதி தொடர்பில் தீர்வு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிக கடன்களை செலுத்த வேண்டியுள்ள 03 நிறுவனங்களுக்கும் 45 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட போதும் அந்த கால அவகாசத்தில் அந்த நிறுவனங்கள் கடனை செலுத்தவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அந்த நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பிலும் குறிப்பிட்டார்.

அத்துடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அந்த கூட்டுத்தாபனம் வழங்க வேண்டிய நிதி தொடர்பில் தொடர்ச்சியாக ஞாபகமூட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். (TC)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »