நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜுன் 28ஆம் திகதி வரை நீடிப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய தேசிய பாதுகாப்பு சபையில் ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தலைமையில் கூடும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் போது இறுதி முடிவு எடுக்கப்படலாம். இந்த முடிவுகள் இன்று அல்லது நாளை அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது என தமிழன் நாளாந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
