Our Feeds


Tuesday, June 8, 2021

www.shortnews.lk

நேற்று அறிவிக்கப்பட்ட 47 கொரோனா மரணங்கள் பற்றிய முழு விபரம் இணைப்பு.

 



கொவிட் தொற்றால் மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்றும் அறிவிப்பு. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மே மாதம் 17ம் திகதி முதல், நேற்று முன்தினம் வரையிலான காலப்பகுதியில் 47 மரணங்கள் சம்பவித்துள்ளன.

அவர்களில் 21 பெண்களதும் 26 ஆண்களதும் மரணங்கள் உள்ளடங்குகின்றன.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையின் அடிப்படையில் எல்பிட்டிய, வத்துகஹமுல்ல, தங்கொட்டுவ, மாரவில, வலப்பனை, தெடிகமுவ, வத்தளை, மாத்தறை, ஹட்டன், கலகெதர, வெல்லம்பிட்டி, ஊரகஹ, ஹொரணை, கோனபொல வடக்கு, பரகஸ்தொட்ட, தெஹிவளை, கொழும்பு-09 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் தலவாக்கலை, நுவரெலியா, திருகோணமலை, அலவ்வ, நீர்கொழும்பு, காலி, களுத்துறை, தர்கா நகர், அங்கொடை, நாத்தாண்டிய, வலஹப்பிட்டிய, ஹபருகல, மொரந்துடுவ, மாஹோ, பொல்கஹவெல, இப்பாகமுவ, கண்டி, புலத்சிங்கள, அக்குரணை, தெஹியத்தகண்டி, பூகொடை, தொம்பே மற்றும் வேயாங்கொடை பகுதிகளை சேர்ந்தவர்களின் மரணங்களும் பதிவாகியுள்ளன.

இந்த அறிக்கையின் பிரகாரம். 30 முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஒருவரும், 40 முதல் 49 வயதுக்கு உட்பட்ட ஒருவரும் 50 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 11 பேரும், 60 முதல் 69 வயதுக்கு உட்பட்ட 14 பேரும், 70 முதல் 79 வயதுக்கு உட்பட்ட 13 பேரும், 80 முதல் 89 வயதுக்கு உட்பட்ட 05 பேரும், 90 முதல் 99 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேரும் கொவிட் நோயால் உயிரிழந்தனர்.

அவர்களில் 09 பேர் வீட்டில் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் 35 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மரணமடைந்தனர்.

அத்துடன் இந்த மரணங்கள், கொவிட்-19 தொற்றுடன் கொவிட்-19 நியூமோனியா, நாட்பட்ட கல்லீரல் நோய், பெப்டிக் அல்சர் நோய் நிலைமை, நீரிழிவு, சருமநோய், உயர் குருதியழுத்தும், தீவிர கொவிட்-19 நியூமோனியா, குருதி நஞ்சானமை, பல உறுப்புகள் செயலிழந்தமை, தீவிர இதய நோய் நிலை, நாட்பட்ட சிறுநீரக நோய், நாட்பட்ட சுவாசக் கோளாறு, நுரையீரல் அழற்சி மற்றும் மூளைக்குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டமை ஆகியவற்றால் சம்பவித்துள்ளன. 




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »