ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு உரித்தான மேலும் பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது இன்று(4) இணைய வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, வைத்திய ஆராய்ச்சி நிறுவகம், இலங்கை நிலஅளவை திணைக்களம், குடும்ப நல சுகாதார பணியகம், வடமேல் மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சிப் பிரிவு ஆகிய இணையத்தளங்கள் மீது இவ்வாறு இணையவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களை இலக்குவைத்து அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசின் கவனயீனத்தால் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், அச்சங்கத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த இணையத்தளங்கள் தற்போது சீர்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
