Our Feeds


Sunday, June 20, 2021

www.shortnews.lk

அதிகமானோர் கொரோனா உயிரிழக்கின்றனர் - இப்போது நான் பாராளுமன்றில் குரல் எழுப்ப வேண்டும் - ரனில் விக்கிரமசிங்க

 



“நான் ஏன் மீண்டும் பாராளுமன்றத்துக்குச்​ செல்வதாக பலர் கேட்டனர். உண்மையில் எனக்கு பாராளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை” எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, “பாரிய அழுத்தங்கள் வந்தன. நாட்டில் கொரேனா தொற்று தீவிரமடைந்துள்ளது. எவ்வித கட்டுப்பாடும் இல்லை. நினைத்ததை விட அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் குரல் எழுப்ப வேண்டும் என உணர்ந்ததால், பாராளுமன்றத்துக்கு வர தீர்மானித்தேன்” என்று கூறினார்.


பாராளுமன்ற உறுப்பினராக, ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று (18) மாலை வெளியாகியது.

இந்நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இரண்டாவதாக இலங்கையின் அரசியல் நிலவரம் மிகவும் மோசமாகவுள்ளதென தெரிவித்த ரணில், அரசாங்கத்தின் புகழ் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதை தான் கண்டதில்லை. இதற்கான மாற்று வழியை பராளுமன்றத்தில் எதிர்க்கட்சி இன்னும் முன்வைக்கவில்லை. இ்வ்வாறான அரசியல் பின்னணி மற்றும் நிலையை தான் இதற்குமுன்னர் கண்டதில்லை என்றார்.

அரசியலும் குழப்பம், நாடும் குழப்பத்தில் அதனால் எதிர்காலத்தில் என்ன நடக்குமென்பது தனக்கும் குழப்பமாக உள்ளதெனத் தெரிவித்த அவர், 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன் பொருளாதார முகாமைத்துவத்துக்கே தான் முன்னுரிமை வழங்கியதாக ரணில் தெரிவித்தார்.

“ஆனால், கோட்டாபாய ராஜபக்‌ஷ நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர், வருமான வரியை நீக்கினார். உண்மையில் எமது வருமானம் குறைவடைந்தது.

வரி குறைப்பு செய்ததால் பாரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படுமென தெரிவித்தனர். ஆனால், அது நடக்கவில்லை. நாட்டில் வருமானம் குறைவடைந்துள்ளதால் பணத்தை அச்சிட ஆரம்பித்துள்ளனர். பணம் அச்சிடப்படுவதால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும் இதன் பிரதிபலனே எரிபொருள் விலை அதிகரிப்புக்குக் காரணம்” என்றார் ரணில்.

“பல நாடுகள் கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அவ்வாறு சந்தித்த நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை செயற்படுத்துவதால் சர்வதேச நாணய நிதியம் அந்த நாடுகளுக்கு கடன் வழங்கியுள்ளது” என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »