Our Feeds


Wednesday, June 16, 2021

www.shortnews.lk

பாராளுமன்றம் செல்வது ரனில் தான் - தேர்தல் ஆணைக்குழுவுக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

 



ஐக்கிய தேசியக் கட்சி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிலைக்காக ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.


கடந்த பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் நேரடி வாக்குகளால் எந்தவொரு ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

எனினும் கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »