Our Feeds


Thursday, June 3, 2021

www.shortnews.lk

நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

 



இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,683 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 162,397 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 2,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 195,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்களில் 1,566 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »