(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் -19 நிலைமையில் நாட்டின் அரசியல் எனும் தொனிப்பொருளில் நேற்று இரவு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஸூம் நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், நாடாளுமன்றம் செல்வதற்கு நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றாலும் இதுதொடர்பில் பாரிய அழுத்தம் வந்தது. விசேடமாக இரண்டு விடயங்களை பிரதானமாகக் கொண்டே இந்தத் தீர்மானத்துக்கு வந்தேன்.
முதலாவதாக கொவிட்-19 ஐ கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. நாங்கள் நினைத்ததையும் விடவும் மரணங்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலைமையில் இது தொடர்பாக குரல் கொடுக்கவேண்டும் என உணர்ந்தேன்.
அடுத்ததாக அரசியல் நிலைமையை பார்க்கும்போது, அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது மிகவும் கஷ்டமான நிலையாகும். இதற்கு மாற்றுவழி ஒன்றை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியும் இதுவரை முன்வைக்கவில்லை. இது மிகவும் பயங்கரமான சந்தர்ப்பமாகும்.
இவ்வாறான அரசியல் நிலைமையை நான் ஒருபோதும் கண்டதில்லை. தற்போதைய நிலைமையில் நாடும் பிரச்சினைக்குள்ளாகி உள்ளது. அரசியலும் பிரச்சினைக்குள்ளாகி இருக்கின்றது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என என்னாலும் உணர்ந்துகொள்ள முடியாத நிலையே இருக்கிறது.
அதனால் சிலவேளை, நான் நாடாளுமன்றம் சென்றபின்னர் தற்போது செல்லும் போக்கை சரிசெய்துகொள்ள முடியுமாக இருக்கும் என நம்புகின்றேன். இந்த விடயங்களே நான் நாடாளுமன்றத்துக்கு செல்ல எடுத்த தீர்மானித்தன் பிரதான காரணிகளாகும்.
அதனால் கொவிட்-19 ஐ கட்டுப்படுத்த என்னால் முடிந்த ஆலோசனைகளை தெரிவிப்பதற்கு முயற்சிப்பேன். அதேபோன்று பொருளாதார ரீதியிலும் நாடு பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதனால் அனைத்தையும் புதிதாக சிந்தித்து, ஓர் அமைப்பாக ஒன்றிணைந்து செயற்பட்டாலே இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என நினைக்கின்றேன் என்றார்.
