Our Feeds


Tuesday, June 29, 2021

www.shortnews.lk

BREAKING: இலங்கையின் பிரதான வைரஸாக டெல்டா - கொரோனா மாறுவதற்கு வாய்ப்பு - அமைச்சர் Dr சுதர்ஷனி கடும் எச்சரிக்கை

 



(எம்.ஆர்.எம்.வசீம்)


சுகாதார பாதுகாப்பு முறைமைகளை கடைப்பிடிக்காவிட்டால் எதிர்வரும் பத்து வாரங்களுக்குள் இலங்கையில் பிரதானமாக பரவிச் செல்லும் வைரஸாக டெல்டா அமையலாம் என ராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார பாதுகாப்பு முறைமைகளை பேணி செயற்படாவிட்டால் அடுத்துவரும் 10 வாரங்களில் இலங்கையில் பரவிச் செல்லும் பிரதான கொவிட் தொற்றாக டெல்டா வைரஸ் அமையலாம் என விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதனால் அவ்வாறான நிலைமை ஏற்படாதவகையில் காத்துக்கொள்வது எமது அனைவரதும் பொறுப்பாகும்.அதற்காக சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடித்து வரவேண்டும்.

மேலும் எல்பா வைரஸ் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் மரணிக்கின்றனர். அதனால்தான் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதுவரைக்கும் கர்ப்பிணி பெண்கள் 12 பேர் இதுவரை கொவிட் -19 தொற்றினால் உயிரிழந்திருக்கின்றனர்.

எனவே கொவிட் -19 வைரஸ் பரவல் தொடர்பான எச்சரிக்கை நாட்டில் இன்னும் குறையவில்லை. புதிய எதிரி ஒன்று எம்மைச் சூழ்ந்துள்ளது. அதனால் மிகவும் அவதானமாக எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »