இன்று (07) அக்கரைப்பற்று பகுதியில் இராணுவத்தினர் ரோந்தும், தடுப்பூசி பற்றி விழிப்புணர்வும் சுகாதார விதிமுயை மீறியோருக்கு பி.சி.ஆர்,மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று( 07) திங்கட்கிழமை வீதிகளில் அலட்சியமாக நடநது கொள்பவர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் ரோந்து இடம் உலாவினர். அதனை தொடர்ந்து மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வுகளும் மற்றும் தடுப்பூசி விழிவிப்புணர்வுகளும் வீதி வீதியாக அறிவிக்கப்பட்டது. வீணாக வீதிகளில் நடமாடுகின்ற நபர்களுக்கு பி.சி.ஆர், மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம் .ஏ. ஜனாப் காதர் அவர்கள் தெரிவித்தார்கள்.
அக்கரைப்பற்றில் அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்று அபாயத்தை கட்டுப்படுத்தும் முகமாகவும் வீதிகளில் பொருட்படுத்தாது நடமாடுகின்றவர்களையும் மற்றும் சுகாதார விதி முறைகளை பேணாத வியாபாரிகளையும் கட்டுப்படுத்துவதற்க்காக இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பரிசோதனைகள் அக்கரைப்பற்று காதிரியா வீதி , மாவடிப்பள்ளி வீதி , வெள்ளப்பாதுகாப்பு, வீதிகளிலும் மற்றும் அக்கரைப்பற்று 06 ம் குரிச்சியிலும் மேற் கொள்ளப்பட்டன.
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிகளின் விதி முறைகளை கவனத்திற்கொள்ளாது வீதிகளில் நடமாடுபவர்களை கட்டுப்படுத்த இராணுவதனதினர்களும் கலமிறங்க அவர்களது பங்களிப்புக்களை வழங்கியமை முக்கிய அம்சமாகும்.
எனவே தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து பொறுப்புடன் நடந்து இந்த அபாயகரமான கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


