கொரோனா வைரஸ் தொற்று சமூகத்திற்குள் பரவியுள்ளதா என்பதை ஆராயும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் எழுமாறாக PCR பரிசோதனைகளை நடத்த சுகாதார அமைச்சு, பிரதேச சுகாதார பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமைக்கு முன்னர், கொவிட் சமூக பரவல் தொடர்பான தகவல்களை திரட்டிக்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.
