Our Feeds


Wednesday, June 16, 2021

www.shortnews.lk

PHOTOS: அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையில் SJB MPக்களுடன் ஹக்கீம் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களும் கையெழுத்து.

 



எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரனைக்கு இன்று (16) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், எரிபொருள் விலையை அதிகரிக்க வலுசக்தி அமைச்சர், அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவில்லை என அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சர் உதய கம்மன்பில, அடிப்படை பொறுப்புக்களை மீறியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மிக அதிகளவில் குறைவடைந்திருந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை எரிபொருளின் விலையை குறைக்காது, எரிபொருளின் விலையை அதிகளவிலேயே வைத்திருந்ததுடன், அதனால் பெற்றுக்கொள்ளப்பட்ட இலாபத்தை பாராளுமன்றத்திற்கும், மக்களுக்கும் தெளிவூட்டவில்லை எனவும் நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை உள்ளிட்ட 10 விடயங்களை மேற்கோள்காட்டி இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »