Our Feeds


Wednesday, June 16, 2021

www.shortnews.lk

VIDEO: பலஸ்தீன் முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் - இஸ்ரேலில் புதிய அரசு அமைந்த பின் நடத்தப்பட்ட முதல் தாக்குதல்.

 



பலஸ்தீன முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. பலஸ்தீன போராட்டக் குழுக்களில் சில இஸ்ரேல் மீது தீப்பற்றும் பலூன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறியே இந்தத் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் முன்னெடுத்துள்ளதாக அல்-ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.


இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் தாக்குதல்கள் ஒரு இரவுடன் நிறுத்தப்பட்டுள்ளன.


இதேவேலை, தாக்குதல்கள் தொடர்ந்தால் தாமும் உரிய பதிலடி வழங்க வேண்டி வரும் என பாலஸ்தீன பாதுகாப்பு பிரிவான ஹமாஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. 



இஸ்ரேலில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்று ஓரிரு நாட்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புதிய அரசில் முஸ்லிம் கட்சி உறுப்பினர்கள் 4 பேர் அங்கத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »