Our Feeds


Friday, July 30, 2021

www.shortnews.lk

12 - 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - அரசு யோசனை

 



12 க்கும் 18 வயதிற்கும் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ´கொவிட் தடுப்பூசி´ ஏற்றுவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.


இது சம்பந்தமான முதல் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. ´பைஸர்´ அல்லது ´மொடர்னா´ தடுப்பூசியை இந்த வயதுப் பிரிவு மாணவர்களுக்குச் செலுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பரிந்துரை கிடைத்த பின் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவளை, 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசியேற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிபார்சு கிடைத்தவுடன் 18 வயதிலிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »