Our Feeds


Monday, July 26, 2021

www.shortnews.lk

உங்கள் மாவட்டத்தில் கேஸ் விலை எவ்வளவு? - மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும் வகையில் கேஸ் சிலிண்டரின் விலை : புதிய வர்த்தமானி வெளியானது

 



(இராஜதுரை ஹஷான்)


சமையல் எரிவாயுவின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமாணி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எல். பி. ஜி. 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை 1150 ரூபா என உறுதிப்படுத்தப்பட்டு நுகர்வோர் அதிகார சபையினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்புதிய விற்பனை விலை நேற்று (25) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டரின் விற்பனை விலை மாவட்ட அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 18 லீற்றர் (9.6 கிலோ கிராம் எடை) சமையல் எரிவாயு சிலிண்டரை கொழும்பு மாவட்டத்தில் 1,150 ரூபாவுக்கும் கம்பஹா மாவட்டத்தில் 1,150 ரூபாவுக்கும் களுத்துறை மாவட்டத்தில் 1,158 ரூபாவுக்கும், புத்தளம் மாவட்டத்தில் 1,174 ரூபாவுக்கும், கேகாலை மாவட்டத்தில் 1178 ரூபாவுக்கும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை குருணாகல் மாவட்டத்தில் 1,177 ரூபாவுக்கும், காலி மாவட்டத்தில் 1,181 ரூபாவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் 1,181 ரூபாவுக்கும் கண்டி மாவட்டத்தில் 1,191 ரூபாவுக்கும் , மாத்தறை மாவட்டத்தில் 1,194 ரூபாவுக்கும் ,மாத்தளை மாவட்டத்தில் 1,195 ரூபாவுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 1,217 ரூபாவுக்கும் அநுராதபுர மாவட்டத்தில் 1,215 ரூபாவுக்கும் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் பொலன்னறுவை மாவட்டத்தில் 1,215 ரூபாவுக்கும் வவுனியா மாவட்டத்தில் 1,216 ரூபாவுக்கும் ,மன்னார் மாவட்டத்தில் 1,234 ரூபாவுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 1,217 ரூபாவுக்கும் மொனராகலை மாவட்டத்தில் 1,248 ரூபாவுக்கும், பதுளை மாவட்டத்தில் 1,235 ரூபாவுக்கும் பெற்றுக்கொள்ள முடியும்.

அம்பாறை மாவட்டத்தில் 1,252 ரூபாவுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 1,229 ரூபாவுக்கும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,250 ரூபாவுக்கும் யாழ் மாவட்டத்தில் 1,259 ரூபாவுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 1,243 ரூபாவுக்கும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,242 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »