Our Feeds


Wednesday, July 14, 2021

www.shortnews.lk

கொரோனாவை முழுமையாக இல்லாதொழிக்க உள்ளுராட்சி மன்றங்கள் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் - இஸ்திஹார் இமாதுத்தீன்.

 



கொவிட்19  கொரோனா வைரஸ் நம் நாட்டில் முழுமையாக இல்லாதொழித்திட நாடளாவிய ரீதியில் இயங்கிக்கொண்டிருக்கும் உள்ளுராட்சி மன்றங்கள் முனைப்புடன் செயட்பட்டால் கொரோனா வைரஸை நம் நாட்டில் இருந்து முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்தார்


நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கண்டி மாவட்டத்தில் வேகமாகப் பரவி வருகின்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் நம் நாட்டில் வேகமாக பரவி முதலாம் அலை இரண்டாம் அலையென பல உயிர்களை‌ காவு கொண்டு வரும் நிலையில் முழு நாடும் முடக்கப்பட்டு நம் நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கேள்விக்குறியாக அமைந்துள்ளது. நாட்டின் ஜனாதிபதியின் நேரடி வழிகாட்டலில் மேற்படி சுகாதார அமைச்சின் ஊழியர்களும் பொது சுகாதார பிரிவினரும் பொலீஸார் மற்றும் இராணுவத்தினரும் இப்பயங்கர வைரஸை ஒழித்துக்கட்ட பாரிய ‌முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். 


இப்பயங்கர நோயினை ஒழித்துக் கட்டும் பொறுப்பை சுகாதாரப் பகுதியினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் பாரம் கொடுத்துவிட்டு இவர்கள் எல்லாவற்றையும் முற்றாக நீக்கி விடுவார்கள் என எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. 


இப் பயங்கர கொடிய வைரஸை முற்றாக ஒழித்துக்கட்டி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்பும் பாரிய பொறுப்புகளில் நாடளாவிய ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களும் தங்களது பங்களிப்புகளை வழங்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது ‌.


நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகளில் அபிவிருத்தி பணிகளும் வரிசையாக அழைப்புகளும் மாத்திரம் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 


நாட்டு மக்களினதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் தத்தமது உள்ளூராட்சி மன்ற பிரிவுகளில் இருந்தும் ஒழித்துக்கட்ட முனைப்புடன் செயற்பட்டால் நிச்சயம் கொரோனா வைரஸ் முழு நாட்டிலிருந்தும் ஒழித்துக் கட்ட முடியும். 


கொரோனா வைரஸ் ஒழித்துக் கட்டுவது மனித உயிர்களை பாதுகாப்பதும் அரசினதும் சுகாதார பிரிவினரும் பாதுகாப்பு பிரிவினரும் பொறுப்பு என உள்ளூராட்சி மன்றங்கள் ஓரமாக இருப்பது பொருத்தமற்றதாகும். 


கொவிட் 19 வைரஸின் திரிபாக ஜூன் 17ஆம் திகதி தொடக்கம் டெல்டா வைரஸும் நம் நாட்டை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. தற்போது மத்திய மாகாண கண்டி மாவட்டம் கொவிட் 19 அவதானமிக்க பிரதேசமாக மாறியுள்ளது. 


நாட்டில் இயங்கும் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்ற தவிசாளர் அதன் மக்கள் பிரதிநிதிகள் தங்களது உள்ளூராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தங்களது ஊழியர்கள் சுகாதாரப் பிரிவினர் ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் வெளிமான்கள் புத்திஜீவிகள் நலன்புரி இயக்கங்கள் மூலமாக தங்களது உள்ளூராட்சிப் பிரிவுக்குள் கொவிட்டின் கொடூரத்தன்மை பற்றியும் அதன் பாதகங்கள் பற்றியும் வீடு வீடாக சென்று மக்களை தெளிவுபடுத்தி செயல்படுவோம் ஆனால் நிச்சயம் கொவிட் 19 மற்றும் டெல்டா தீவுகளிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்திட முடியும். 


எனவே உடனடியாக காலம் தாழ்த்தாது நாட்டில் இயங்கும் உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது பகுதிகளில் இருக்கும்  பாதுகாப்பு பிரிவினருடனும் சுகாதார அதிகாரிகளோடும் கலந்துரையாடல்களை நடத்தி நாட்டில் வேகமாக பரவும் ஆட்கொல்லி நோயான கொவிட் 19 டெல்டா வைரஸை முற்றாக ஒழித்துவிட அரசாங்கம் மற்றும் சுகாதார துறையினருக்கும் பூரண பங்களிப்புக்களை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உள்ளூராட்சி மன்றங்கள் முனைப்புடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »