Our Feeds


Friday, July 30, 2021

www.shortnews.lk

நாட்டில் மீண்டும் கடுமையான பயணத்தடை? இராணுவத் தளபதி எச்சரிக்கை

 



இலங்கையில் தினசரி பதிவாகும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் தினமும் கொரோனா நோயாளர்ககளின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் நேற்றுமுன்தினம் 1,900 ஐ கடந்துள்ளது.

இதேவேளை, நேற்று 2,300 இற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே, மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் இல்லையென்றால் மீண்டும் பயணத்தடையை கடுமையாக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »