சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தினமும் ஐந்துக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதாக மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் அனைவரும் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.