ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, செப்டெம்பர் 1ஆம் திகதி வரையிலும் கைது செய்யப்படமாட்டார் என உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரே, மேற்கண்டவாறு உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவுக்குக்கான தடை உத்தரவு இன்று நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் அவரைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனையடுத்து, ஏப்ரல் இறுதியில் அடிப்படை உரிமை மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
