இலங்கையில் இன்று புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் முஸ்லிம்கள் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.
கொழும்பு, மாளிகாவத்தை PD சிரிசேன மைதானத்தில் முஸ்லிம் இடது சாரி முன்னனி நடத்திய ஹஜ் பெருநாள் திடல் தொழுகையில் பெருந்திரளாக முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா பயணத்தடைகள் நீங்கியுள்ள நிலையில் முஸ்லிம்கள் அடைந்த பெருநாள் தினம் என்பதால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் தொழுகையில் ஆர்வத்துடன் பங்கேற்றதை காண முடிந்தது.
சுகாதார வழிமுறைகள் பேணி நடத்தப்பட்ட புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மாளிகாவத் மைதானத்தில் இரண்டு உலமாக்களை கொண்டு இரண்டு தடவைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.










