ஜனாதிபதியும், அரசாங்கமும், தன்னிச்சையாக மேற்கொள்ளும் தீர்மானங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானதாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவைர்களுடன் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது வட மாகாண பிரதம செயலாளராக தமிழ் மொழி அறியாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் வடமாகாணத்தில் பெரும்பான்மையானோராக வாழும் தமிழர்களின் நலன் கேள்விக்குறியாக்கப்படும் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.