Our Feeds


Wednesday, August 11, 2021

SHAHNI RAMEES

கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி பிரான்ஸின் பிரபல கழகத்தில் இணைந்தார் !

 


உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி, ஸ்பெயினின் பார்சிலோனா கழகத்தில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற நிலையில், பிரான்ஸின் பிரபல கழகத்தில் 2 வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.    

ஸ்பெய்னிலிருந்து பிரான்ஸை சென்றடைந்த லியோனல் மெஸ்ஸி, பாரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்துடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.  


அத்துடன் தேவைப்படின் ஒரு வருடத்தால் ஒப்பந்தத்தை நீடிக்கவும் அவர் இணங்கியள்ளார். 

 

ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்காக கடந்த  21 ஆண்டுகள் விளையாடிய 34 வயதாக லியோனல் மெஸ்ஸி, அந்த கழகத்திலிருந்து வெளியேறி தற்போது பிஎஸ்ஜி எனப்படும்  பாரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்தில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார். 


   கால்பந்து போட்டியில் தனக்கென ஒரு பாதை அமைத்து உலகம் முழுவதும் இரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர்தான் ஆர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸி, ஆரம்ப காலத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார்.  


ஒரே கழகத்திற்காக விளையாடி அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையை படைத்த மெஸ்ஸியுடன் நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்சினை காரணமாக ஒப்பந்தத்தை நீடிக்க முடியவில்லை என பார்சிலோனா அணி அறிவிப்பு வெளியிட்டது.    மெசியுடன்  லா லிகா அமைப்பின் நியாயமான நிதி திட்டத்தின்கீழ் அக் கழகத்தினால் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாமல் போனது.   இதன் காரணமாகவே லியோனல் மெஸ்ஸி, அங்கிருந்து விலகி பி எஸ் ஜி கழகத்தில் இணைய சம்மத்தித்தார்.   


 மெஸ்சியின் இந்த அறிவிப்பு கால்பந்து இரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 34 வயதான மெஸ்ஸி, இரண்டு வருடத்திற்கான ஒப்பந்தம் தொடர்பான தகவலை பிஎஸ்ஜி கழகத்திடம் நேற்றையதினம் பெற்றுள்ளார்.  இதனால் பிரான்ஸின் தலைசிறந்த கழக அணியான பிஎஸ்ஜி அணியுடன் இரண்டு வருடம் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.   

இந்த அறிவிப்பினை பாரிஸ் சென் ஜெயின்ட் ஜேர்மெய்ன் அணி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »