ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சர்வதேச கோரிக்கைகளை தலிபான் இயக்கம் நிராகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளை தலிபான்கள் வேகமாக கைப்பற்றி வருகின்றனர் குண்டூஸ், சார் ஈ புல், தலோகான் ஆகிய நகரங்கள் அண்மையில் தலிபானிடம் வீழ்ந்தன. கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து 5 மாகாணங்களின் தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் விமானங்கள் தலிபான்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஜவ்ஸ்ஜான் மாகாண்தின் ஷெபேர்கான் நகரில் நடந்த தாக்குதலில் 200 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், தலிபான்கள் அக்கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர்.
அதேவேளை, அமெரிக்கா மேலும் தலையீடு செய்வது தொடர்பில் தலிபான் பேச்சாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். (மெட்ரோ)