Our Feeds


Friday, August 13, 2021

www.shortnews.lk

BREAKING: இலங்கையில் கொரோனா மரணங்கள் தொடர்பில் வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்.

 



இலங்கையில் தற்போது உள்ள கொரோனா நெருக்கடி நிலை மேலும் தொடர்ந்தால், வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டும் என வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீட்டிற்கான IHME நிறுவனம் கூறுகிறது.


தற்போது நாட்டில் நாளொன்றுக்கு இறப்புகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டுகிறது.

இது தொடர்ந்து அதிகரித்தால் அது ஒரு நாளைக்கு 350 இறப்புகளை எட்டும் என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

அதன்படி, டிசம்பர் 1 ஆம் திகதி நிலவரப்படி நாட்டில் 12,603 ​​இறப்புகள் பதிவாகும் என அவர்கள் கணித்துள்ளனர்.

எனினும், இதே நிலை நீடித்தால், பலி எண்ணிக்கை 22,000 ஆக உயரும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

இதற்கிடையில், நாட்டில் நேற்று (12) 3,000 க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் மொத்த கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 345,118 ஆக அதிகரித்துள்ளது.

11 ஆம் திகதி 156 கோவிட் நோய்த்தொற்றுகளுடன் நாட்டில் பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5,620 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(tc)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »