லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் மாதம் 2 வது முறையாக நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
லங்கா பிரீமியர் லீக்கில் 5 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் 14 உள்ளூர் வீரர்களையும் 6 வெளிநாட்டு வீரர்களையும் கொண்டுள்ளது.
இதேவேளை, இந்த வருட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களின் பதிவுகள் நாளை (24) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.