சதொச கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு கொல்கலன் வெள்ளை பூண்டுகளை வேறொரு தரப்பிற்கு வழங்கிய சம்பவம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம், குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தனவிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சுமார் 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட கருத்து மற்றும் வெள்ளை பூண்டு விவகாரம் ஆகியன குறித்து, தான் பொலிஸ் மாஅதிபரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே, இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
