Our Feeds


Wednesday, September 8, 2021

www.shortnews.lk

A/L, O/L பரீட்சைகள் மீண்டும் ஒத்தி வைக்கப்படும் சாத்தியம் − கல்வி அமைச்சு

 



நாட்டில் ஏற்பட்ட கொவிட் நிலைமை காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைகளை திட்டமிட்ட வகையில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


கல்வி பொது தராதர சாதாரண தரம், உயர் தரம் மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கான திகதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது நாட்டில் காணப்படுகின்ள கொவிட் நிலைமை காரணமாக பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை 2022ம் ஆண்டு பெப்ரவரி  மாதம் 21ம் திகதி முதல் மார்ச் மாதம் 3ம் திகதி வரை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதேபோன்று, 2021ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐந்தாம் தரத்திற்கான புலமை பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »