Our Feeds


Wednesday, September 8, 2021

www.shortnews.lk

இலங்கைக்கு மற்றுமொரு தீவிரவாத தாக்குதலா? அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

 



இலங்கையில் மீண்டுமொரு தீவிரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்ற எச்சரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இந்த எச்சரிக்கை குறிப்பை அமெரிக்கா இலங்கைக்கு எதிராக வெளியிட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் அதனை வெளியிட்டிருக்கின்றது.

இதேவேளை, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (தமிழன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »