Our Feeds


Tuesday, September 28, 2021

ShortNews Admin

இலங்கையில் அதிகமானவர்கள் கொரோனாவில் இறந்தமைக்கான உண்மைக் காரணத்தை வெளியிட்டது சுகாதார அமைச்சு



(எம்.மனோசித்ரா)


கொவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் நீரிழிவு மற்றும் உயர் இரத்தம் அழுத்தம் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தமையே அவர்கள் உயிரிழக்க பிரதான காரணிகளாகும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையில் கொவிட் -19  தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களில் 80 சத வீதமானோர் இவ்வாறான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் கடந்த இரு வாரங்களாக பதிவாகும் கொவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக குறைந்து வருகிறது. நேற்று திங்கட்கிழமை 51 கொவிட் -19 மரணங்கள் மாத்திரமே பதிவாகின. கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ள இந்த 51 பேரில் 29 ஆண்களும் , 22 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 41 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். மொத்த கொவிட் -19  மரணங்களின் எண்ணிக்கை 12 731 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் மாலை 6 மணி வரை 715 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 514, 324 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 455,344 பேர் குணமடைந்துள்ளதோடு , 46,249 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »