கெரவலப்பிட்டிய, யுகதனவி மின் நிலைய பங்குகளை அமெரிக்காவுக்கு வழங்கியதன்மூலம் எம்.சி.சி ஒப்பந்தத்தின் ஒரு அம்சத்தை இலங்கை நிறைவேற்றியுள்ளதாக அரச ஆதரவு பிக்குவாக கருதப்படும் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
வேறு வேறு வடிவங்களில் எம்.சி.சி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயலும் அரசின் நடவடிக்கைகளை முறியடிக்க ,சட்டத்துறையினருடன் ஆராய்ந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் , தேசிய வளங்களை பாதுகாக்க ,அவற்றுக்கு அன்பை செலுத்தும் தலைவர்கள் நாட்டில் இல்லாமை துர்ப்பாக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாருக்கு பின்னர் ,நாட்டில் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் அனைவரும், நாட்டை அமெரிக்கா ,இந்தியா,சீனாவுக்கு அடகுவைக்கும் முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
