நாடு முழுவதும் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா என்பது தொடர்பான தீர்மானம் நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா ஒழிப்பு செயலணியின் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி தலைமையில் நாளை இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்வின்றி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் திங்கட்கிழமை (13) அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது, அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை திங்கட்கிழமையுடன் தளர்த்துவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்து நாளை தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிமுடிகிறது.
பெரும்பாலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.
