Our Feeds


Sunday, September 26, 2021

ShortNews

கொரோனா ஜனாஸா அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மையவாடி இடப்பற்றாக்குறை பற்றிய முக்கிய கூட்டம் - பொலிசாரின் தலையீட்டால் இடைநிறுத்தம்



(எச்.எம்.எம்.பர்ஸான்)


கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முக்கிய கூட்டமொன்று பொலிஸாரின் தலையீட்டால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி – மஜ்மா நகரில் நிலவும் இடப்பற்றாக்குறை தொடர்பாக இக்கூட்டம் தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டம் ஆரம்பமாக இருந்த சில நிமிடங்களுக்கு முன்னர் அங்கு வந்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுவினர் கூட்டத்தை நடத்த வேண்டாம் என்றும் கூட்டத்துக்கு வந்த நபர்களை கலைந்து செல்லுமாறும் வேண்டிக் கொண்டனர்.

இதற்கான காரணத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனவிடம் சட்டத்தரணி ஹபீப் றிபான் கேட்டபோது, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இக்கூட்டத்தை நடாத்த வேண்டாம் என பொலிஸ் பொறுப்பதிகாரி விளக்கமளித்தார்.

பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய கூட்டத்துக்கு வருகை தந்த முக்கியஸ்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »