(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கம் இன்று (01) முதல் சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக சிவப்பு சீனியை 130.00 ரூபாவுக்கு பொதுமக்களுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தது.
இதனையடுத்து சீனியைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் இன்று காலை முதல் சதொச நிறுவனங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
கொழும்பு மாளிகாவத்தை சதொச நிறுவனத்தில் காலையிலிருந்து ஒருவருக்கு ஒரு கிலோ சீனி வீதம் வழங்கிய நிலையில் திடீரென நிறுவன ஊழியர்களால் சீனி இல்லையென பதாகை போடப்பட்டதால் மக்கள் குழப்பத்துக்குளாகினர்.
இது தொடர்பாக அங்கு சென்ற எமது ஊடகவியலாளர் நிறுவன முகாமையாளரிடம் கேட்டபோது தம்மிடம் இருந்த சீனி முடிந்ததாகவும் தலைமைக் காரியாலயத்துக்கு அறிவித்துள்ளதாகவும் சீனி வந்தவுடன் அதனை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் மக்கள் அவர்கள் பொய் கூறுவதாகவும் சீனியை மறைத்து வைத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தினர்.


