அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பைஷர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர். அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வகை தடுப்பூசியையும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விநியோகிப்பது தொடர்பான முடிவானது உலக சுகாதார ஸ்தாபனத்தால் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி தலைமையிலான கொவிட் -19 ஜனாதிபதி பணிக்குழுவினாலேயே முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.
நாட்டில் தடுப்பூசிகளின் விநியோக செயல்முறை உலக சுகாதார ஸ்தாபனத்தால் தீர்மானிக்கப்பட்டது என அரசாங்கத்தின் சில பிரிவுகளால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த அறிக்கையை வெளியிட்டார்.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பைஷர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய அடுத்த மாதம் 4 மில்லியன் பைஷர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பைசர் தடுப்பூசி எவ்வாறு வழங்கப்படுகின்றது? இதில் சதி மற்றும் இரகசியம் உள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
