கொரோனா ஒழிப்பு தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக விசேட வைத்தியர் அசோக குணரத்ன அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கு அவர் நேற்று (07) அறியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த குழுவிலிருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பேராசிரியர் நீலிகா மலவிகே மற்றும் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம ஆகியோர் குறித்த குழுவிலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
