Our Feeds


Tuesday, September 28, 2021

ShortNews Admin

BREAKING: ஊரடங்கு தொடருமா? – புதிய தகவல் இதோ..



நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதிக்குப் பின்னர் நீடிப்பதா இல்லையா என்பது குறித்தான இறுதித் தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் எடுக்கப்படவுள்ளது.


அமெரிக்காவிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை நாடு திரும்பவுள்ளார். அதன் பின்னர் கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

நாடு திறக்கப்படுமாயின் புதிய சுகாதார வழிகாட்டல்களை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி அரச அலுவலர்கள் கடமைகளுக்கு சமூகமளிக்கும் நேரம் காலை 9 மணியாகவும் ,தனியார்துறை ஊழியர்கள் சமூகமளிக்கும் நேரம் காலை 10 மணியாகவும் மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

அதற்கமைய போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.அரச சேவையாளர்களுக்கான விசேட சுற்றறிக்கையொன்றினை பொதுநிர்வாக அமைச்சு நாளை வெளியிடவுள்ளது.

நாடு திறக்கப்பட்டாலும் பொதுநிகழ்வுகள் மற்றும் திருமண நிகழ்வுகள் நடத்தப்பட உடனடி அனுமதி வழங்கப்படாது.பாடசாலைகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »