கடந்த 6 வாரங்களுக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சுமார் 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் சுமார் 35 வாரங்களுக்கும் பின் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இந்த சம்பவம் புத்தளம் ஆதார மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாக குறித்த மூன்று குழந்தைகளும் பிறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த மூன்று குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் இருப்பதோடு, தாய் மற்றும் குழந்தைகள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
