ஃபைசர் தடுப்பூசியின் ஒரு டோஸ் உருவாக்கும் பிறபொருள் எதிரிகளை விட இருமடங்கு பிறபொருள் எதிரிகளை மொடர்னா தடுப்பூசியின் ஒற்றை டோஸ் உருவாக்குகிறது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
பெல்ஜியத்தில் நடந்த ஒரு ஆய்வில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
