2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதியிட்ட அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு எண் 2243/01 மூலம் கோவிட் -19 தொற்றுநோய் சூழ்நிலையின் அடிப்படையில் பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் பகுதி 2 ஐ அமல்படுத்துவதன் மூலம் மேதகு ஜனாதிபதி அவசரகால நிலையை அறிவித்ததாகத் தெரிகிறது.
பொது மக்கள் பாதுகாப்பு என்று பெயர் குறிப்பிடுவது போல, தொற்றுநோயால் ஏற்படும் சூழலை விட பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சூழ்நிலைக்கு அதன் ஏற்பாடுகள் மிகவும் பொருத்தமானவை.
மறுபுறம், 2005 ஆம் ஆண்டின் சட்டம் எண் 13, இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டம் குறிப்பாக தொற்றுநோய் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட பேரழிவு சூழ்நிலைகளைச் கையாள வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், (உலக சுகாதார ஸ்தாபனம் கோவிட் -19 ஐ உலக தொற்றுநோயாக அறிவித்து கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு) இலங்கை அனர்த்த முகாமைத்துச் சட்டத்தின் கீழ் நாட்டில் பேரிடர் நிலைமை இருப்பதாக ஜனாதிபதி அறிக்கை ஒன்றைக்கூட வெளியிடவில்லை.
ஜனாதிபதி தலைமை வகிக்க முடியுமான ஏற்ப்பாடுகள் உள்ள இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தில் தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையைக் கொண்ட செயலணியை நிறுவுவதற்கான ஒரு வழிமுறை இருப்பதை நாங்கள் அதில் காண்பதோடு,அத்தகைய செயலணியை ஜனாதிபதி நிறுவ தவறிவிட்டார்.
மாறாக, தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்கு புறம்பாக ஒரு 'ஜனாதிபதி செயலணி’உருவாக்கும் பாதை எடுக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலுக்கு 18 மாதங்களை எட்டும் நிலையில், தொற்றுநோயைக் கையாள அரசாங்கம் தொடர்புடைய சட்டங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டது என்பதையும் நாங்கள் கவனித்தோம். இந்த நோக்கத்திற்காக பல நாடுகள் சிறப்பு சட்டங்களைக் கூட இயற்றி செயற்ப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசர கால நிலை அறிவிக்கப்படவில்லை என்பதோடு இந்த அறிக்கையை வெளியிடுவது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மேலும் தவறாக சித்தரித்து சர்வாதிகாரத்தை நோக்கி மேலும் நகரும் என்ற உள்நோக்கத்துடன் கூறப்பட்டுள்ளதா என்பதிலும் நாங்கள் கூடிய கவனம் கொண்டுள்ளோம்.
அத்தியாவசிய சேவைகளின் செயற்பாடு மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் வழமையான நடவடிக்கைகளுக்கான ஏற்ப்பாடுகள் குறித்தும் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ள அறிக்கை ஊடாக அத்தியாவசிய சேவைகள் மற்றும் வழமையான சேவைகளை வழங்குவதற்கு தடையாக உள்ளதா இல்லையா என்பதை நாங்கள் கவனிக்கிறோம்.
தடுப்பூசிகள், பரிசோதனை கருவிகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை சரியான நேரத்திலும் வெளிப்படையான முறையிலும் எடுக்க அரசாங்கம் தவறிவிட்டது என்பதை நாங்கள் அவதானித்துள்ளோம்.விவசாய சமூகத்திற்கு பெரும் நஷ்டதை ஏற்ப்படுத்தி, விவசாய பொருட்களை வாங்கத் தேவையான வசதிகளை விவசாய சமூகத்திற்கு வழங்க தவறிவிட்டுள்ளதோடு பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை உயர்த்தியுமுள்ளனர்.
இது தவிர, அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் அரசாங்க வருவாயை இழந்துள்ளதோடு, வெளிநாட்டு கையிருப்பு குறைந்து வரும் நிலையில், இதன் விளைவாக எல்.பி.எரிவாயு மற்றும் பால் மா உட்பட பல அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.
அதேபோல, இதனால் அரசாங்த்திற்கு பெரும் இழப்பு (அல்லது வருவாய் இழப்பு) ஏற்படும் வன்னம் சீனி போன்ற பிற அத்தியாவசிய பொருட்களின் விலை அரசாங்கத்தின் ஊழல் கொள்கைகளால் உயர்ந்துள்ளது.
2003 ஆம் ஆண்டின் நுகர்வோர் விவகார அதிகாரச் சட்டம் எண் 9 இன் படி, அதிகபட்ச விலைகளை பரிந்துரைத்தும் பொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தலைத் தடுக்கவும் சட்டரீதியான அதிகாரங்கள் உள்ளன என்பதையும் நாங்கள் கவனிக்கிறோம்.
இதனால், ஏதேனும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தடைபட்டால், இதற்கு அரசின் திறமையின்மை மற்றும் தவறான நிர்வாகமே காரணமாகுவதோடு, இது பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரநிலை பிரகடனம் தேவைப்படும் ஒரு தொந்தரவு காரணமாக அல்ல என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
அவசரநிலை என்று அழைக்கப்படுவது வீணாகவும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை தொடர்ச்சியாகவும் தவறாகவும் கட்டுப்படுத்துவதன் மூலம் சர்வாதிகாரத்தை தொடர வேண்டும் என்ற ஆழ்மன நோக்கத்துடன் உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்திக்கூறுகிறோம்.
அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்ட அவசர கால நிலையை உடனடியாக இரத்து செய்து (குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியுமான மற்றும் தொற்றுநோய்களை திறம்பட கையாள முடியுமான தர உத்தரவாதமிக்க) தொற்றுநோய்களைக் கையாள்வதற்கான ஏற்பாடுகளைக் கொண்ட அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுப்பதோடு, இதற்கிடையில், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பெற்று, தொற்றுநோய் சூழ்நிலையை கையாளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையை நிறுவ இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின்படி செயல்படுமாறு மேதகு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.
ரன்சித் மத்தும பண்டார (பா.உ)
பொதுச் செயலாளர்
ஐக்கிய மக்கள் சக்தி
