Our Feeds


Wednesday, September 1, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: ஆளும் SLPP உறுப்பினரின் செயல் - கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் பணி பகிஷ்கரிப்பு

 



இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து தாம் விலகுவதாக புத்தளம் மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.


மஹவௌ – கொஸ்வாடிய சரஸ்வதி வித்தியாலயத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகளின் போது, கிராம உத்தியோகத்தர் ஒருவரின் பணிக்கு, நாத்தாண்டியா பிரதேச சபையின் பொதுஜன முன்னணி உறுப்பினர் ஒருவரால் இடையூறு விளைவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே, தாம் குறித்த பணிகளில் இருந்து விலகுவதாக புத்தளம் மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் திலங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »