எதிர்காலத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், 24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.