Our Feeds


Sunday, October 17, 2021

SHAHNI RAMEES

இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத உயர் தர மாணவர்களுக்கான அறிவிப்பு

 

நாட்டிலுள்ள 18 தொடக்கம் 19 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடும்ப சுகாதார காரியாலயத்தின் பணிப்பாளா் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி த சில்வா தெரிவித்தாா்.

கொழும்புக்கு வந்து தடுப்பபூசி பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொடுப்பது தொடர்பில் தற்போது நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டாா்.

ஒருசில மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில் குறைவை அவதானிக்க கூடியதாகவுள்ளது. தூர மாகாணங்களிலும் மாணவர்கள் கல்வி கற்கிறாா்ள். மாகாணங்களுக்கிடையில் நிலவும் பயணத்தடையின் காரணமாக  இவ்வாறான நிலை உருவாகலாம் .கொழும்புக்கம் அவர்களால் வரமுடியாமல் இருக்கலாம்.

அதனால், சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலுமுள்ள மத்தியநிலையங்களினூடாக இந்த துடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன.

இந்நிலையில், தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்கள் சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய காரியாலயங்களுக்கு சென்று தடுப்பசியை பெற்றுக்கொள்ள முடியும். 21ஆம் திகதி நாடுபூராகவும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானாலும் அதன் பின்னர், சம்பந்தப்பட்ட பிரதேசத்திலுள்ள தடுப்பபூசி வழங்கும்  மத்திய நிலையத்துக்குச் சென்று கற்கை அடையாள அட்டையை பயன்படுத்தி தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டாா்.

இதுதொடர்பில் விளக்கமளித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »