Our Feeds


Monday, October 18, 2021

ShortNews Admin

கொரோனாவின் பின் சிறுவர்களுக்கு ஏற்படும் மிஸ்-சி நோய் ஆபத்தானது - விசேட வைத்தியர் வாசன் எச்சரிக்கை



(எம்.மனோசித்ரா)


கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படும் மிஸ்-சி நோயானது சிறுவர்களது சகல உடற் தொகுதிகளையும் பாதிக்கக் கூடிய அபாயம் மிக்கதாகும்.

8 – 16 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் இந்நோயால் பாதிக்கப்படும் வீதம் அதிகமாகவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் கிளை செயலாளர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் , நாட்டில் கொவிட் -19 தொற்று நிலைமை குறைவடைந்து வரும் நிலையில் தொற்றுக்கு பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படும் மிஸ்-சி நோய் நிலைமை அதிகரித்து வருகிறது. இந்த நோய் சிறுவர்களது சகல உடற் தொகுதிகளையும் பாதிக்கக் கூடிய ஒரு நோயாகவே காணப்படுகிறது.

குறிப்பாக 8 – 16 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் இந்நோயால் பாதிக்கப்படும் வீதம் அதிகமாகவுள்ள போதிலும் , சகல சிறுவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவுள்ளது. உயர் காய்ச்சலுடன் கூடிய அதாவது உணவு கால்வாய் தொகுதியை அண்டிய குண இயல்புகள் காணப்படுகின்றன.

வாந்தி, வயிற்றோட்டம், பசியின்மை உள்ளிட்ட பல்வேறு நோய் அறிகுறிகள் தென்படும். அத்தோடு உடலில் பழுக்கள் ஏற்படல் , தசைத் தொகுதி பாதிப்புக்கள் , மூட்டு வலி , தசை பிடிப்பு உள்ளிட்டவையும் காணப்படலாம். இவ்வாறான அறிகுறிகள் பிள்ளைகளுக்கு தென்பட்டால் பெற்றோர் துரிதமாக வைத்தியரின் ஆலோசனையைப்பெற வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »