Our Feeds


Tuesday, October 19, 2021

SHAHNI RAMEES

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு


 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று தொடக்கம் (19) அடுத்த இரண்டு நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான சூழல் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களம்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »