Our Feeds


Saturday, November 13, 2021

ShortTalk

வீட்டை விட்டு வெளியேறி, பின் மீண்டும் வீடு திரும்பிய 3 பெண் பிள்ளைகள் - முஸ்லிம் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன ?


உலகில் வாழும் தனி மனிதன், அல்லது மனித சமுதாயம் தன்  வாழ்க்கைக்கு தேவையான விடையங்களை தான் அனுபவித்து  பாடம் கற்று வாழ தலைப்படுவரானால்  அவனுடைய வாழ் நாள்  அவனுக்கு இடம் கொடுக்காது என்பதே உண்மை. 


ஒவ்வொரு விடயத்திலும் தான் அனுபவம் பெற்று,  வாழத் தலைப்படும் போது  அவனுடைய வாழ்க்கை முடிந்து விடுகின்றது.  எனவே  ஒரு சமூகம் அல்லது ஒரு தனி மனிதன்  தனக்கு முன் வாழ்ந்து  சென்ற  மனிதர்களின் அல்லது மனித சமூகத்தின் வாழ்க்கையின் அனுபவத்தை, பாடமாக கற்று  வாழத் தலைப்படும் போது தான் அவன் வாழ்க்கையில் ஒரு  வெற்றி பெற்ற மனிதனாக  அல்லது ஒரு   நிறைவான சமூகமாக வாழ முடிகின்றது. 


இந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போய் வீடு திரும்பிய சிறுமிகள் விடயத்தில் நமது சமூகம் கற்றுக்கொள்ளவேண்டிய  முக்கிய படிப்பினைகள் உண்டு. 


இவை நம் குடும்பத்தில் நடந்தது அல்ல, எதுவானாலும் நமக்கென்ன, என  கை மண்ணைத் தட்டி விட்டு, நம் பாட்டில் இருப்போம் என்ன  சிந்திக்காமல்,  இதைப்பற்றிய  நீண்ட  பாடம் ஒன்றை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.


அதாவது சம்பவத்திற்கான காரணம்  என்ன என்பதை  நாமும் நீண்ட தூரம் சிந்திக்க வேண்டும்.


பெண் பிள்ளைகள் சிறைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படுவதில்லை  என்ன சில மீடியாக்கள்  இச்சம்பவத்தை வைத்து, முஸ்லிம்களை சில குத்து வார்த்தைகள் மூலமாக  குத்தி காட்டியதையும் நாம் அவதானிக்க முடிந்தது.


மேலும் இவ்வாறான சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்தை பழிதீர்க்க காத்து நின்ற்கும் சில முஸ்லிம் விரோத சக்திகளுக்கு ஒரு வாய்ப்பாகவும், இவர்களுக்கு எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பு தரவுகளாவும் அமைகின்றது. இச்சம்பவம்  சதிகாரா சக்திகளால் வருங்காலங்களில் முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் உரிமை மீறல் என முன்வைக்கப்படலாம். இவ்வாறான சம்பவங்களை இவர்கள் ஊதாரணத்திற்கு பயன்படுத்தலாம்.


இவற்றை  நாம் மறு புறத்தில் இருந்தும்,   மார்க்க வரம்பு, அதன் அடிப்படையில் இருந்து  சிந்திக்க வேண்டும். 


முதலாவதாக  பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் உள்ள, அன்னியோன்யமான உறவுகளின்  விரிசல்களை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது.  


பிள்ளைகளுடன் மிக நெருக்கமான உறவுகளைப் பேணி  அவர்களின் செயல்பாடுகளில் , சிந்தனை போக்குளில், மிகவும் கவனம் செலுத்தி.  அவர்கள்  யாருடன்  நட்பு வைத்திருக்கின்றார்கள், யாருடன் பழகுகிறார்கள், என்பதை உண்ணிப்பாக கவனித்து  அதற்கேற்றவாறு  அவர்களுக்கு ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்குவது பெற்றோர்களின்  கடமையாகும். 


அவர்களின்  சிந்தனைகள் ,   அதற்கேற்றவாறு  அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி , நாம் பின்பற்றும் மார்க்கம் சம்பந்தமாக  மாறுபடும் சிந்தனைகள்   அவர்களிடம் காணப்பட்டால், அதற்கு தேவையான  அறிவுரைகளை வழங்கி அவர்களை சரியான பாதையில் நெறிப்படுத்த வேண்டும். இதற்காக முதலில் அவர்களுடனான பாசம் அந்நியோன்யம், புரிந்துணர்வு இருத்தல் வேண்டும் . 


அவர்களின் ஆசைகள்,  விருப்பங்கள்,   சிந்தனைகள் போன்றவற்றை அறிந்து அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க  பிள்ளைகளுடன் அந்நியோன்யமான  உறவு மிகவும் இன்றியமையாததாகும்.


மேலும் அவ்வாறான சிந்தனைகள் ஆசைகள் மார்க்கத்திற்கும்  பெண் சமூகத்திற்கும் பொறுத்தமில்லை என கானும் பட்சத்தில், அவற்றின் விபரீதங்கள் விளக்கி அவர்களை சரியான பாதையில் திருப்பி விட அவர்களுடனான நெருக்கமான உறவுகள் பேனப்படுவது முக்கியமானதாகும்.


அதிகமான இடங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உறவுகளில் நீண்ட இடைவெளி காணப்படுகின்றது. பிள்ளைகளின் தேவைகள், ஆசைகள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், போன்றவற்றை அறிந்து கொள்ளும் அளவிற்க்கு அவர்களின் உறவுகள் பேனப்படுவதில்லை. இக்குறைபாடானது இலங்கையில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது நம் சமூகத்தில் கூடுதலாகவே காணப்படுகிறது. 


இதற்கான காரணங்கள். பெற்றோர் போதிய அறிவில்லாமல் காணப்படுவது.

வேலைப்பளு காரணமாக பிள்ளைகள்,  குடும்பங்களுக்கான நேரங்களை ஒதுக்காமை போன்றவற்றின் காரணமாக இவ்வாறான பிரச்சிகள் ஏற்படுகின்றன.


எனவே இவ்வாறான காரணங்களுக்கான மனத் தாக்கத்தின் வெளிப்பாடே இவ்வாறன துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்கு காரணமாகும்.


எனவே நமது மார்க்க கடமைகளை எடுத்து நோக்கும் போது,  நமது வாழ் நாளில் குடும்பம் பிள்ளைகளுக்கான நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் கழிப்பது, அவர்களின் கடைமைகளை ஆசைகளை விருப்பங்கள் நிறைவேற்றிக் கொடுப்பது எமது கடமைகளில் ஒன்றாகும்.


மேலும் அவர்களின் வயதுக் கோளாறு காரணமாக,  காலத்தின் அறிவியல் வளர்ச்சியின் வெளிப்பாடுகள் போன்றவற்றின் காரணமாக, நவீன கலாச்சார மாறுபட்ட சிந்தனைகள்  வருவது இயற்கையே. இவ்வாறான சந்தர்பத்தை அறிந்து அதற்கேற்ற வகையிலான ஆலோசனை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்துவதில் நாம் அக்கறையாக இருத்தல் வேண்டும்


இவற்றை தவர விடுவதில் மார்கத்தின் கடமைகளில் ஒன்றை தவர விடுகிறோம் என்பதைய நாம் சிந்திக்கத்  தவருகிறோம்.


நடந்து முடிந்த சம்பவம் அல்லாஹ்வின் கிருபையால் பிள்ளைகளுக்கு எந்த வித விபரீதமான விழைவுகளும் ஏற்படாமல் பாதுகாப்பாக வீடு சேர்ந்து விட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.


ஆகவே இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடை பெறாமல் நாம் நமது பிள்ளைகள் விடயத்திலும், நம் கடமை விடயத்தில் கண்காணிப்பாக இருந்து எமது பிள்ளைகளுக்கும் சமூகத்திற்கும் வரும் ஆபத்துக்கள் இருந்து பாதுகாத்துக் கொள்வேம்.


பேருவளை ஹில்மி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »