Our Feeds


Monday, November 15, 2021

SHAHNI RAMEES

தடை செய்யப்பட்ட கிருமி நாசினிகளுடன் அக்குறணையைச் சேர்ந்த ஒருவர் கைது!



 தடை செய்யப்பட்ட சட்டவிரோத கிருமிநாசினிகளை விநியோகத்துக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் செட்டிக்குளம் முகாமினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கலென்பிந்துவெவ பொலிஸ் பிரிவில் கண்ணிமடு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் தடை செய்யப்பட்ட சட்டவிரோத விவசாய கிருமி நாசினிகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 29 வயதுடைய  அக்குறணை  பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அநுராதபுரம் உப விவசாய திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவரிடமிருந்து தடைசெய்யப்பட்ட டைசோன் 6 கிலோ கிராம் , 15 பக்கெற், கிளைபோசெட், கொன்ஃபோ-60 300 மில்லி லீற்றர் போத்தல்கள் 22, கொன்ஃபோ-60 ஒரு லீற்றர் போத்தல்கள் 8, கிரான்ட் 30 பக்கெற்றுக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேபோன்று கொகாவெவ பொலிஸ் பிரிவில் யடலேவ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போஃபிட் 500 ஈ.சி. ஒரு லீற்றல் போத்தல்கள் 67 மற்றும் கிரான்ட் 112 கிராம் பக்கெற்றுக்கள் 397 என்பவற்றை விநியோகிப்பதற்காக தம்வசம் வைத்திருந்த 45 வயதுடைய கலென்பிந்துவௌ பிரதேசத்தைச் சேர்ந்த பிறிதொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »