Our Feeds


Thursday, November 11, 2021

SHAHNI RAMEES

சிவப்பு எச்சரிக்கை பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மூட தீர்மானம்


 தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் இயற்கை அனர்த்த மத்திய நிலையத்தின் ஊடாக மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.


அந்தவகையில், மத்திய மாகாணத்திலும் பல இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை மையப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மத்திய மாகாண ஆளுநரிடம் அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம். ராமேஸ்வரன்,

மறு அறிவித்தல் வரை மத்திய மாகாணத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளை தற்காலிகமாக மூடும் அதிகாரத்தை அதிபர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள அதிபர்கள் பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கும் அது தொடர்பான அறிவிப்பை மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்தோடு, சகல அதிபர்களும் தத்தமது பாடசாலைகளில் உள்ள அனர்த்தங்கள் ஏற்படும் எச்சரிக்கைகளை கருத்திற்கொண்டு பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிபர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம். ரமேஷ்வரன் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »