தனியார் பஸ்களில் சுமார் 25 வீதமானவை டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் இயங்குவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் குறைந்த விகிதத்திலானோரே டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய போதிலும், தற்போதைய நிலைமை காரணமாக பஸ் உரிமையாளர்கள் அதிகளவில் மண்ணெண்ணெய் பயன்படுத்த தூண்டப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பஸ்கள் மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்து, அரசிடம் இருந்து நிவாரணம் கிடைக்காமல் கடும் பொருளாதார சரிவை சந்தித்து வரும் பஸ் உரிமையாளர்கள் மண்ணெண்ணெய்யை அதிகளவில் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, சுமார் 9,000 தனியார் பேருந்துகள் பராமரிப்பு இன்மை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.