50 நாட்களுக்கு பிறகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்கவும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் அதிக நிதி செலவாகும் அது நிதி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தாதா ? அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என துறைமுகம்,பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஒன்றினைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய் பாதுகாப்பு தொகையை சேமிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை வலுசக்தி அமைச்சர் முன்னெடுக்கவில்லை. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமைக்கான காரணம் மற்றும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.
தேசிய எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தற்போது 33ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல், 55ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் மாத்திரம் கையிருப்பில் உள்ளது இனிவரும் காலங்களில் நிச்சயம் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவித்துள்ளன.